அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக, அதிமுக சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மதுரை மண்டலம் சார்பில் தயார் செய்யப்பட்ட விளம்பர பிரசார வாகனத்தை அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற உள்ள இளைஞர்களின் எழுச்சி நாயகனின் எழுச்சி மாநாட்டிற்கு அனைவரும் வருக வருக வருக என
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திருவொற்றியூர் தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டி விளம்பரத்தினை திருவெற்றியூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி மேற்கு பகுதி செயலாளர் டாக்டர் கே.கார்த்திக் எம்.சி மற்றும் திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி தகவல் தொழில்நுட்ப அணி பகுதி செயலாளர் எம்.நரேந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.