கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட நான்கு பேர் கைது.

PUBLISHED:04-Nov-2023

கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட நான்கு பேர் கைது.

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் கேரளா லாட்டரி சீட்டுகளை கைபேசி மூலம் விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து  தண்டையார்பேட்டை போலீசார் தலைமையில் தனிநபர் ஒருவரை அனுப்பி லாட்டரி சீட்டை பெற்று வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையை உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த வேலு 36 , முனுசாமி 38 , காந்தி குமார் 39 ஆகிய மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சென்ட்ரிங் தொழிலாளி ரத்தினகுமார் 46 உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் பயன்படுத்திய கைபேசி மற்றும் கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




Recommended For You