PublicNewsTv-கழிப்பறையை சுத்தம் செய்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி!?.

PublicNewsTv-கழிப்பறையை சுத்தம் செய்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி!?.

PUBLISHED:28-Nov-2017

திருவள்ளூர்;-

 ஜே.என்.சாலை அருகில், கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ளது, ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. இங்கு, ஆறாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரை, 1,000 மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர் - ஆசிரியைகள் பயன்படுத்த, 10 கழிப்பறைகள் உள்ளன. தனியார் சுகாதார பணியாளர் மூலமாக, இந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய, மாதம், 2,500 ரூபாய், அரசு வழங்குகிறது. கடந்த மாதம் வரை, இப்பள்ளியில், தனியார் மூலம், கழிப்பறை சுத்தம் செய்யும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, வகுப்பு தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில் இருந்த மாணவியரை அழைத்த, தலைமை ஆசிரியர், பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கழிப்பறையை சுத்தம் செய்யாவிட்டால், பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என, எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால், அச்சத்தில் ஆழ்ந்த மாணவியர், அழுதபடியே, எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி, கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்தனர். 

இப்பிரச்னை தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.




Recommended For You