PUBLICNEWSTV- வண்டலூர் பூங்காவில் உள்ள ஆறு மாத சிங்கக்குட்டிக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.

PUBLICNEWSTV- வண்டலூர் பூங்காவில் உள்ள ஆறு மாத சிங்கக்குட்டிக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.

PUBLISHED:24-Jul-2018

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்க குட்டி க்கு பெயர் சூட்டும் விழா  நடைப்பெற்றது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி , பிறந்த 6 மாதமே ஆன சிங்க குட்டிக்கு ஜெயா என்ற பெயர் சூட்டினார் .

மத்திய உயிரியல்  பூங்காக்கள் ஆணையத்தின் அறிவுரைப்படி வங்கப்புலிகள் புதிய புகலிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த இருப்பிடங்களில்  பார்வையாளர்கள் புலிகளை அருகில் சென்று பார்வையிடும் வகையில் ரூ.27 இலட்சம் செலவில் கட்டபட்டுள்ள புலிகள் புகலிடத்தை முதல்வர் பார்வையிட்டார்.
 
  மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆண்டு தோறும் 20 இலட்சம் பார்வையாளார்கள் வருகை புரிகின்றனர்.

இதில் 5 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர் .ஆகவே மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில ரூ.18 இலட்சம் செலவில் நவீன வசதிகளுடன் சிறுவர் பூங்காவை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கல்வெட்டினை முதல்வர் திறந்து வைத்தார்.  

மேலும் இந்நிகழ்ச்சியில்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஊரகத் தொழில் துறை அமைச்ர் ப.பெஞ்சமின் ,திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சிறுணீயம் பி. பலராமன் , காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்  மதனந்தபுரம் பழனி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் , கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Recommended For You