PUBLIC NEWS TV-எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுதான் இடத்தை முடிவு செய்யும், சுகாதாரதுறை அமைச்சர

PUBLIC NEWS TV-எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுதான் இடத்தை முடிவு செய்யும், சுகாதாரதுறை அமைச்சர

PUBLISHED:01-Apr-2018

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடங்களை தேர்வுசெய்து, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். எந்த இடத்தில் மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு (கேத் லேப்) திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதை திறந்துவைத்த, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது,”

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும்” என்றார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது, “கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் மட்டுமே இருந்தன.

தற்போது கூடுதலாக 5 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் 45 பேர் வரை டயாலிசிஸ் செய்யும் நிலை உருவாகியுள்ளது” என்றார்.




Recommended For You