PUBLICNEWSTV - மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்த விடுதி உரிமையாளர், வார்டனுக்கு போலீஸ் வலை வீச்சு.

PUBLICNEWSTV - மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்த விடுதி உரிமையாளர், வார்டனுக்கு போலீஸ் வலை வீச்சு.

PUBLISHED:25-Jul-2018

கோயம்பத்தூர்:-

கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி களுக்கு பாலியல் தொல்லை அளிக் கப்பட்டதாக எழுந்த புகாரை யடுத்து, விடுதி உரிமையாளர் மற்றும் பெண் வார்டனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன.

கோவை பீளமேடு பாலரங்கநாத புரம் ஜீவா வீதியில் ஜெகநாதன் (48) என்பவர் மகளிர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இதில், புனிதா (32) என்பவர் வார்டனாகப் பணிபுரிகிறார். கல்லூரி மாணவியர், வேலைக்குச் செல்வோர் என 150-க் கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், சில தினங் களுக்கு முன் ஜெகநாதனுக்கு பிறந்த நாள் என்று கூறி, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நட்சத் திர ஹோட்டலுக்கு 5 மாணவி களை வார்டன் புனிதா அழைத் துச் சென்றாராம். அங்கு மது அருந்துமாறும், வாட்ஸ்-அப் மூலமாக ஜெகநாதனுடன் பேசு மாறும், அவர் மகிழ்ச்சியடையும் வகையில் செயல்பட்டால் விடுதிக் கட்டணம்கூட கட்ட வேண்டாம் எனவும் புனிதா தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

தங்களை தவறானப் பாதையில் அழைத்துச் செல்ல முயற்சிப்பதை அறிந்த மாணவிகள், அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு விடுதிக்கு திரும்பியுள்ளனர். இதுதொடர்பாக, தங்களது பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் நேற்று முன்தினம் விடுதியை முற்றுகையிட்டனர். தகவ லறிந்து வந்த பீளமேடு போலீ ஸார் விசாரித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தரப் பில் யாரும் புகார் செய்யப்படாத நிலையில், ஜீவா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பீளமேடு போலீஸில் புகார் செய்தார்.

அதன் பேரில், விடுதி உரிமையாளர் ஜெக நாதன், வார்டன் புனிதா ஆகி யோர் மீது பெண்கள் மீதான வன் கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெகநாதனும், புனிதாவும் தலைமறைவாகியுள்ளனர்.
இதையடுத்து மாநகரக் காவல் ஆணையர் கே.பெரியய்யா உத்தர வின்பேரில், உதவி ஆணையர் சுரேஷ், காவல் ஆய்வாளர் செல்வ ராஜ், காவல் உதவி ஆய்வாளர் கந்த சாமி மற்றும் போலீஸார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஜெகநாதன், புனிதா ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

மேலும், தண்ணீர்பந்தல் சாலையிலுள்ள ஜெகநாதனுக்கு சொந்தமான மற்றொரு தங்கும் விடுதியிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு விடுதிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேரன் மாநகரில் உள்ள ஜெக நாதன் வீட்டிலும் சோதனை நடத் திய போலீஸார், அவரது குடும்பத் தாரிடம் விசாரணை நடத்தினர்.

ஜெகநாதனின் செல்போன் அழைப்புகளைக் கொண்டும் விசாரணை நடைபெறுகிறது.

இதற்கிடையே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராதிகா, மாநகரக் காவல் ஆணையரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.
 




Recommended For You