publicNewsTv-முதல்வர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவர்கள் கைது.

publicNewsTv-முதல்வர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவர்கள் கைது.

PUBLISHED:12-Sep-2017

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலா நீக்கப்பட்டதை கண்டித்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் ரயில் சந்திப்பு எதிரே போராட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இன்று அதிகாலை மன்னார்குடியில் உள்ள அதிமுக நகர அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. கண்காணிப்பு கெமராவை மறைத்து மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் கிடைத்த தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்  இருவர்   மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 




Recommended For You