PublicNewsTv-தனலட்சுமி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை?.

PublicNewsTv-தனலட்சுமி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை?.

PUBLISHED:16-Feb-2018

பெரம்பலூர் மற்றும் திருச்சியில் தனலட்சுமி சீனிவாசன் குழும கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்துக்கு சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனம், சர்க்கரை ஆலை, ஹோட்டல், பெட்ரோல் பங்க், பஸ் நிறுவனம், ரெடிமிக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

பெரம்பலூர், திருச்சி, சென்னை, கோவை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள வீடு, கல்லூரி மற்றும் அலுவலகங்களில இந்த சோதனை நடைபெற்றது. பெரம்பலூர் கல்லூரியில் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திரா எனும் நட்சத்திர கலை விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடைபெறவிருந்த நிலையில் இந்த சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.




Recommended For You