PUBLIC NEWS TV - முதல்வர் அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்.

PUBLIC NEWS TV - முதல்வர் அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்.

PUBLISHED:02-Oct-2017

 

ஓசூரை மாநகராட்சியாக மாற்ற விவசாயிகள்  எதிர்ப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தொரப்பள்ளி பஞ்சாயத்தில்  முன்னாள்  ஊராட்சி மண்ற தலைவர் தலைமையில்  அனைத்து கட்சி சார்பில் கிராமசபை கூட்டம்  நடைபெற்றது, இக்கூட்டத்தில் சமீபத்தில் கிருஷ்ணகிரியில் நடந்த  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்  முதல்வர்  இடைபாடி கே.பழனிசாமி   ஓசூரை மாநகராட்சியாக அரிவித்தார்.

இதற்கு  பல்வேறு  தரப்பிலிருந்து பாராட்டும்  எதிர்ப்பும் ஒருசேரவே கிடைத்து வருகிறது.

இதற்கு இடையில் இராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி பஞ்சாயத்தை புதிதாக உருவாகும் ஓசூர் மாநகராட்சிக்கு இணைக்கப்படும் என அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பினால்  தொரப்பள்ளி பஞ்சாயத்து மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்து மக்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

விவசாயி ஒருவர் கூறுகையில் 

ஓசூர் மற்றும் சுற்றுபுரம் கிராமங்களில்  விவசாயி மக்களே அதிகம்   வசித்து வருகின்றனர்    இவர்கள்  விவசாய நிலங்களை நம்பிதான்  பிழைக்கின்றனர் தற்போது  அறிவித்த அறிவிப்பு விவசாயத்தை அழிக்கும் அறிவிப்பாகும் மேலும்   மாநகராட்சியாக மாற்றபட்டால் அணைத்துக்கும்  வரி     விதிக்கப்படும், வரியும் பல மடங்கு அதிகரித்து விடும் ஏழை விவசாயிகள்  எங்கலால் அதிக வரி செலுத்த இயலாது,  என்றும்  தற்போது ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் பஞ்சாயத்து அப்புரூவள்   வாங்க வேண்டும் அதற்கு ரூபாய் 2 ஆயிரம்  முதல்  5 ஆயிரம்  வரை தான் செலவாகும்  இதுவே  மாநகராட்சியாக மாற்றபட்டால்  ஒரு  வீடு கட்ட பல மடங்கு பணம்  தேவைப்படும்   இது போன்று சுமைகளை   எங்களால் தாங்க  முடியாது இதே போல்  பல  பிரச்சனைகள்  உள்ளன ஆகையால் எங்கள் பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க விடம்மாட்டோம்,

தமிழக அரசு இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் இல்லையேனில் கடுமையான போராட்டங்களை நடத்த போவதாக   விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவித்தனர்.




Recommended For You