PUBLIC NEWS TV -தமிழக அரசுக்கு மாநில விவசாய சங்க தலைவர் இராமகவுண்டர் வேண்டுகோள்.

PUBLIC NEWS TV -தமிழக அரசுக்கு மாநில விவசாய சங்க தலைவர் இராமகவுண்டர் வேண்டுகோள்.

PUBLISHED:09-Oct-2017

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள்  மீது பரபரப்பு  குற்றச்சாட்டு மாநில விவசாய சங்க தலைவர்  இராமகவுண்டர் பேட்டி . 

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தினம் ஆயிரக்கணக்கில் விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் ஓட்டுனர் உரிமம் பெருவதர்க்க வருகிறார்கள் அவர்களை நாள் கணக்கில் காக்க வைப்பதும் மற்றும் ஆவணங்கள் சரியில்லை என்று அலைக்கழிக்கபடுவதும் வாடிக்கையாக்கி உள்ளது. 

ஆர்.டி.ஓ  அலுவலம் அருகே   உள்ள இடைதரகர்கள் மூலம் வரும் விண்ணப்பங்களை உடனே முடித்து கொடுப்பதாகவும்  இதனால் இடைதரகர்கள் பெருமளவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் விண்ணப்பத்திற்கு பெறப்படும் தொகை பல மடங்காகி பெரும் கொள்ளை  இங்கே நடக்கிறது என்றும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முறையாக ஒரு  ஆர்.டி.ஓ அதிகாரி மற்றும்  மூன்று வாகன ஆய்வாளர்கள் இருக்க வேண்டும் ஆனால் ஓசூர் அலுவலகத்தில்  ஒரு ஆர்.டி.ஓ.    ஒரு  வாகன ஆய்வாளர் மட்டுமே  உள்ளதாகவும் அதில் ஆர்.டி.ஓ  கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொருப்பு ஆர்.டி.ஓ வாக   இருப்பதால் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாகிறது மேலும் வட்டார போக்குவரத்து துறையிலுள்ள காலியிடங்களை தமிழக அரசு நிரப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மூலம் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை  ஆகவே மேலும் 15 நாட்களுக்குள் தமிழக அரசு காலியிடங்களை நிறப்ப  வேண்டும், 

இல்லையேனில்

ஓசூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தின் முன் விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்பாட்டம் நடத்த போவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் .இராமகவுண்டர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Recommended For You