PUBLIC NEWS TV - பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேமிக்கும் கிடங்கில் திடீர் தீவிபத்து.

PUBLIC NEWS TV - பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேமிக்கும் கிடங்கில் திடீர் தீவிபத்து.

PUBLISHED:18-Oct-2017

 

ஓசூர் அருகே  பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு  பொருட்களை சேமிக்கும் கிடங்கில் திடீர்  தீவிபத்து.

கிருஷ்ணகிரி  மாவட்டம் ஒசூர் கிருஷ்ணா நகரில் சங்கர்  என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு  பொருட்களை சேமிக்கும் கிடங்கு ஒன்று  இயங்கி வருகிறது. 

நாடுமுழுவதும் தீபாவளி  பண்டிகை கொண்டாடப்பட்டுகிறது  இந்நிலையில் பொதுமக்கள் நேற்று  முதலே பட்டாசுகள் வெடிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணா நகரில் அப்பகுதி மக்கள்    பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது   பட்டாசின் தீ பொறிகள் அருகில் இருந்த கிடங்கில் விழுந்து திடீர்  தீவிபத்து ஏற்பட்டது இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து தீயனைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த தீயனைப்பு துறையினர் தீ யை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்ததால்  மற்றோரு தீ அணைப்பு வாகனம்  வரவழைக்கபட்டது தொடர்ந்து இரண்டு தீ அணைப்பு வாகனமும் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தல் பல  லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

 

 




Recommended For You