PUBLIC NEWS TV- ஓசூரில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி வி,ஏ,ஓவை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

PUBLIC NEWS TV- ஓசூரில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி வி,ஏ,ஓவை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

PUBLISHED:20-Oct-2017

ஓசூரில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி வி,ஏ,ஓவை முற்றுகையிட்ட  பொதுமக்கள்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புனுகன் தொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி அன்னையப்பா மகன் அம்ரிஷ் வயது (20) தனியார் கல்லூரியில் பிபிஏ  முதலாம்  ஆண்டு படித்து வரும் மாணவனுக்கு சுமார் பத்து  நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும் ஓசூர் அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற  போது இரத்த  பரிசோனை செய்த மருத்துவர்  சாதரன காய்ச்சல்தான் என கூறி அனுப்பி விட்டதாகவும் 

மீண்டும்  அம்ரிஷ்க்கு  காய்ச்சல்   வந்ததையடுத்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு காய்ச்சல் அதிகமான பின்பு வந்ததால் கட்டுபடுத்த முடியாது என கூறி 24 மணி நேரம் சிகிச்சையளித்ததாகவும் சிகிச்சை பலனின்றி இன்று   அதிகாலை அம்ரிஷ் இறந்தார்  அம்ரிஷின்  உடலை ஓசூர் புனுகன் தொட்டி  கிராமத்திற்கு ஆம்யூலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறிந்து வந்த  கெலவரப்பள்ளி பஞ்சாயத்து கிராம நிர்வாக அதிகாரி ரஜினிதேவியை பொதுமக்கள்  முற்றுகையிட்டனர்.

ஊர்பொதுமக்கள் கூறியதாவாது எங்களுக்கு எந்த ஒரு டெங்கு விழிப்புணர்வு  முகாமும் நடத்த படவில்லை  தனியார்  மருத்துவமனையில் உள்ள  அளவிற்கு மருந்துவர்கள்  ஏன் அரசு  மருத்துவமனையில் இல்லை, என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் அம்ரேஷ் உடலுடன் சாலை மறியல் செய்ய போவதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (பி,டி,ஓ) சாந்தி அவர்கள் உறிய நடவடிக்கை எடுப்பதாகவும் சரியான  நிவாரணம் வழங்குவதாக கூறியதை அடுத்து  கிராம மக்கள் கலைந்து சென்றனர்.




Recommended For You