PUBLIC NEWS TV- தனியார் தொழிற்சாலைகளுக்கு பல லட்சம் அபராதம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.

PUBLIC NEWS TV- தனியார் தொழிற்சாலைகளுக்கு பல லட்சம் அபராதம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.

PUBLISHED:24-Oct-2017

ஓசூரில் 7  தனியார் தொழிற்சாலைகளுக்கு  ரூ.17 லட்சத்து 55 ஆயிரம்  அபராதம்:

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் சிப்காட் இரண்டு  பகுதியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில், சுகாதாரமற்ற நிலையில் இருந்த 7  தனியார் தொழில்சாலைகளுக்கு  மாவட்ட ஆட்சியர் கதிரவன் 17 லட்சத்து 55 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்தார்.

ஓசூர் சுற்று பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மாவட்ட ஆட்சியர் , சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி கமிஷனர்கள், வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  வீடுகளில் டெங்கு கொசு புழுக்கள் வளரும் வகையில், சுகாதாரமற்ற முறையில் இருந்தால், குடிநீர் இணைப்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் கதிரவன் ஏற்கனவே எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், இன்று மீண்டும் ஓசூர் சுற்று பகுதியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், சார் ஆட்சியர் சந்திரகலா தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள், இன்று  காலை  ஒசூர் சிப்காட் இரண்டு  பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சிப்காட் பகுதியில்  உள்ள 7  தனியார் தொழிலச்சலைகளில், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில், சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், 17 லட்சத்து 55  ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் கதிரவன்  அபராதமாக விதித்தார்.

மேலும் ஒரு தனியார் பள்ளிக்கு முதல்முறை என்பதால் எச்சரிக்கை விடுத்து, மீண்டும் இதுபோன்ற நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.




Recommended For You