PublicNewsTv- மதுக்கடையில் இருவர் வெட்டிக்கொலை, ஒருவருக்கு பலத்தகாயம் போலீஸார் தீவிர விசாரணை...!

PublicNewsTv- மதுக்கடையில் இருவர் வெட்டிக்கொலை, ஒருவருக்கு பலத்தகாயம் போலீஸார் தீவிர விசாரணை...!

PUBLISHED:30-Oct-2017

ஓசூர் அருகே மதுக்கடையில் தகறாறு,ஏற்பட்டு  இருவர் வெட்டிக்கொலை, ஒருவருக்கு பலத்தகாயம்  போலீஸார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மதுக்கடையில் குடிபோதையில் ஏற்பட்ட தகறாரில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையிக்கு கொண்டு செல்லப்பட்டார் இதில் சீனிவாச ரெட்டியை ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர. மேலும் மற்றொருவரான சுரேஷ் ரெட்டி யை மிகவும் ஆபத்தான நிலையில் பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல,
அங்கு சுரேஷ் ரெட்டி சிகிச்சை பலன்யின்றி இறந்து விட  இந்த இரு கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒசூர் அருகேயுள்ள கசவகட்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் மற்றும் சீனிவாசன் அதேபோல சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் அம்ப்ரீஷ் இவர்கள் மூன்று பேரும் கசவட்டா பகுதியில் உள்ள ஒரு அரசுமதுபான கடையில் மது அருந்தி உள்ளனர். அப்போது பத்தளப்பள்ளி பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவரும் மது அருந்தி உள்ளார். 
அப்போது மதுபானகடையில் குடிபோதையில் இவர்கள் நான்கு பேருக்கும் இடையே வாய்த்தகறாறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த தகறாறு முற்றி பத்தளப்பள்ளி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என விநாயகம் மற்றவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என 3 பேரும் மறுத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த விநாயகம் தனது வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து அம்ப்ரீஷ், சுரேஷ் மற்றும் சீனிவாசன் ஆகிய 3 பேரையும் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அம்ப்ரீஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். சுரேசும் சீனிவாசனும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹட்கோ போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த அம்ப்ரீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி விநாயகம் என்பவர் தலைமறைவானதால் அவரை தேடி வருகின்றனர்.
இதனிடையே வெட்டுக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் மேல்சிகிச்சைக்காக பெங்களுர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சீனிவாசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து ஹட்கோ போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 




Recommended For You