PUBLIC NEWS TV- ஓசூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை உள்பட இருவர் பணியிடை நீக்கம்.

PUBLIC NEWS TV- ஓசூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை உள்பட இருவர் பணியிடை நீக்கம்.

PUBLISHED:31-Oct-2017

ஓசூரில் துப்புறவு ஆய்வாளர் மற்றும் அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  தற்காலிக பணியிடைநீக்கம்  மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை. 

ஓசூர், மத்திகிரி, மூக்காண்டப்பள்ளி  பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை  மாவட்ட ஆட்சியர்  கதிரவன்  நேரில் ஆய்வு செய்தார். 

அப்போது ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லதா மற்றும் ஓசூர் துப்புரவு ஆய்வாளர் சந்திரகுமார் ஆகியோரை தற்காலிக பணியிடைநீக்கம்  செய்து  உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்காண்டப்பள்ளி, ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  அரசு கலைகல்லூரி, மத்திகிரி தொழிற்நுட்ப கல்லூரி, மத்திகரி அரசு மேல்நிலைப்பள்ளி, மத்திகிரி வருவாய் ஆய்வாளர்  அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு தடுப்பு  மற்றும்  குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.அந்த  பகுதிகளில் நீர்தேக்க தொட்டியில் லார்வா புழுக்கள் உள்ளனவா என்பதையும்  ஆய்வு செய்தார்.குடிநீர் தொட்டிகளில் அபேட் மருந்து  தெளிக்கும் பணிகளையும், வீடுகளின் மேற்கூரைகளில் வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகள், பழைய டயர்கள், பிளாஸ்டிகள் கழிவுகள்,     காலிடப்பாக்கள் ஆகியவற்றை  அகற்றும் பணிகள்  மேற்கொள்ளப்பட்டது. 

இதனை தொடர்ந்து தேனீர் கடை, மளிகை கடைகள், உணவகங்களில் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு  மேற்கொண்டு பிளாஸ்டிக்  மற்றும் பேப்பர் கப் பயன்பாடுகள் உள்ளதா என்பதையும், குடிநீர் தொட்டிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.
ஓசூர் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  டெங்கு தடுப்பு மற்றும் சுகாதர பணிகளை ஆய்வு மேற்கொண்டடு நீர்தேக்க தொட்டிகள், கழிவறைகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள்  மேற்கூரை பகுதிகளை ஆய்வு செய்து  சுகாதாரமற்ற முறையில் இருந்ததை கண்டு பிடித்தார். பள்ளி தலைமையாசிரியை லதா பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டதின் பேரில் உடனாடியாக  தற்காலிக பணியி
டை நீக்கம் செய்யப்பட்டார். 

மேலும் மூக்காண்டப்பள்ளி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு   சுகாதார பணிகளை சரியாக மேற்கொள்ளாத ஓசூர் நகராட்சி துப்புரவு  ஆய்வாளர் சந்திரகுமார்  தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார் இதன்  அடிப்படையில் இருவரையும் உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.




Recommended For You