PUBLIC NEWS TV-மதவாத சக்திகளை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்.

PUBLIC NEWS TV-மதவாத சக்திகளை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்.

PUBLISHED:03-Nov-2017

மதவாத சக்திகளை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்    

கிருஷ்ணகிரி மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  மீது அவதூறுப்பரப்பியதாக பாஜக,வைக்கண்டித்து சில நாட்களாக தமிழகம் முழுவதும் விசிக சார்பில் சாலை மறியல்,ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது இதனை தொடர்ந்து  கரூர்,மயிலாடுதுறையில் விசிகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் நவம்பர் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

 அதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட விசிக சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.. இதற்க்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார்,மாநில துனைப்பொதுச்செயலாளர் வன்னியரசு,தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்,மாவட்ட செய்தி தொடர்பாளர் வெங்கடேஷ்,சமூக ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் இளையராஜா,மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்தபாபு,ஒசூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்  உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்  கலந்துக்கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.




Recommended For You