PUBLIC NEWS TV- மகாத்மா காந்தியின் வெண்கல திருவுருவசிலை திறப்புவிழா,

PUBLIC NEWS TV- மகாத்மா காந்தியின் வெண்கல திருவுருவசிலை திறப்புவிழா,

PUBLISHED:08-Nov-2017

ஓசூரில் வெண்கலத்தினாலான புதுபொலிவுடன் தேசபிதா மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிரதானா சாலையான காந்தி சாலையின் பெயர் பெற காரணமாக இருந்த சிமெண்டாலான காந்தி சிலை 1971 அக்டோடர் 2 ல் நிறுவப்பட்டது

இந்த சிலை அகற்றப் பட்டு, அதேயிடத்தில் புத்தம் புது பொலிவுடன்  6.5 அடி உயரம் கொண்ட சுமார் 350 கிலோ வெங்கலத்தினலான மகாத்மா காந்தியின் திருவுருவசிலை உருவாக்கப்பட்டு சுமார் 15 லட்சத்து செலவில் நிறுவி வெகு விமர்ச்சியாக புதிய சிலையை திறக்கப்பட்டது

 மேலும் இன் நிகழ்ச்சிக்கு சிலை கமிட்டி தலைவர் முன்னாள் எம்எல்ஏ வெங்கட் ரெட்டி தலைமை வகித்தார். சிலை குழு உறுப்பினர் வீர முனிராஜ் அனைவரையும் வரவேற்றார் இந்த நிகழ்ச்சியில் குழு உப்பினர்கள் டி.வி.எஸ் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடசாமி, ஐஎன்டியுசி பிரகாஷம், திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், தளி எம்எல்ஏவுமான பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிலை அமைக்க உருதுணையாகவும், புதிய  சிலையை அன்பளிப்பாகவும் வழங்கிய முன்னாள் எம் எல் ஏ மனோகரன் பேசியது போது திமுக முன்னாள் நகர மன்ற தலைவர் சத்யா இந்த பழைய சிலையை அகற்றி உலோக சிலை நீங்கள் தந்தால் அதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்றார்.
ஆனால் என்னால் அது அப்போது செய்ய முடியவில்லை தற்போது அது அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் கதிரவன் இந்த பகுதியில் உள்ள குறைகளை தீர்க்க தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து கூட்டம் நடத்தி பணி வளர்ச்சிக்கள் மேலும் வளரவும் இது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 மேலும் இச் சிலையை சிறப்பு விருந்தினர் கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி திறந்து வைத்தார் இன் நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகளும் அணைத்து கட்சி பிரதிநிதிகளும் என 1000க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களும் பல்வேறு கட்சி பொருப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்




Recommended For You