PUBLIC NEWS TV- அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தக பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.

PUBLIC NEWS TV- அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தக பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.

PUBLISHED:24-Nov-2017

கிருஷ்ணகிரி;-

ஓசூர்  பி.எம்.சி டெக் கல்லூரியில் மாவட்ட அளவிலான அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் புத்தக பயிற்சி ஓசூர். பி.எம்.சி டெக் இஞ்ஜினியர் பெருமாள் மணிமேகலை பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகல்வித் துறையுடன் இணைந்து மாவட்ட அளவிலான அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் புத்தக பயிற்சி துவக்கவிழா  கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு  பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியாளர். பி.பெருமாள் அவர்கள், தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். இவ்விழாவில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர்   பி.மலர்  அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாமினை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் முனைவர். எ.புகழேந்தி அவர்கள் பயிற்சியின் நோக்கத்தையும்; முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து துவக்கிவைத்தார். பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளர் பி.குமார் அவர்கள், சிறப்புரையாற்றுகையில் இன்றைய நிலையில் உடல் மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகள் முறைப்படுத்தினால் கல்வித் தரம் மேம்படும் என்று கூறினார்.   பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் மற்றும்  ஐ. டி . ஐ யின்  இயக்குனர்  என். சுதாகரன், பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் முதல்வர்   பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

மேலும் சிறப்புவிருந்தினாராக சென்னை YMCA உடற்கல்வி கல்லூரியின் பேராசிரியர்.  முனைவர். கெ.ஜோதி தயானந்தன் அவர்கள், கலந்து கொண்டு இரண்டு நாட்கள் சிறப்பு உடற்பயிற்சிகள், குழுவிளையாட்டு போன்றவற்றில் பயிற்சி அளிக்க உள்ளார்.     

இவ்விழாவிற்க்கு ஆசிரியர்களை புத்தகம் கொடுத்து ஊக்குவிக்க நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் கலைமாமணி. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
     

புதிய விளையாட்டுக்கான புத்தக  பயிற்சி முகாமில், குழுவிளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. விளையாட்டில் ஆர்வமிக்க பள்ளி மாணவ, மாணவியர், புதிய விளையாட்டுகளை தேர்ந்தெடுப்பதில், தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம், பள்ளிகளில் போதிய விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இருப்பதே ஆகும். இதனால், மாணவ, மாணவியர் இடையே குழுவிளையாட்டு, ஜிம்னாஸ்டிக்ஸ், வாள் சண்டை, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, செஸ், சைக்கிளிங், கடற்கரை வாலிபால், கேரம், சிலம்பம், வளைப்பந்து, ஜூடோ ஆகிய புதிய விளையாட்டுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இருப்பது கிடையாது. உடற்கல்வி ஆசிரியர்களும், புதிய விளையாட்டுகளின் விதிமுறை, யுக்தி குறித்து விளக்கம் அளித்தல் நடைபெறுகிறது.

     பி.எம்.சி கல்லூரியில் நடக்கும் பயிற்சி முகாமில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணைத்து அரசு பள்ளிகளில் இருந்து உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் என, 180 பேர் பங்கேற்றுள்ளனர். முகாமிற்கான, ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர். எஸ்.வளர்மதி அவர்கள் மேற்கொண்டார்




Recommended For You