PUBLIC NEWS TV- தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி,16 மாநில மாணவ,மாணவிகள் பங்கேற்ப்பு.

PUBLIC NEWS TV- தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி,16 மாநில மாணவ,மாணவிகள் பங்கேற்ப்பு.

PUBLISHED:27-Nov-2017

கிருஷ்ணகிரி;-

ஓசூரில் 11வது தேசிய அளவிலான குங்ஃபூ போட்டிகள் நாடு முழுவதிலுமிருந்தும் 16 மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 11வது தேசிய அளவிலான குங்ஃபூ தற்காப்புக்கலை போட்டிகள் துவங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த  போட்டிகளை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி துவக்கி வைத்தார்.

இதில் நாடு முழுவதிலுமிருந்து 16 மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒசூரில், இந்திய குங்ஃபூ சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு குங்ஃபூ சங்கம் சார்பில் 11வது தேசிய அளவிலான குங்ஃபூ தற்காப்புக்கலை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் இந்தபோட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, உத்தரபிரதேஷ், கேரளா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், கோவா, உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த அயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மேலும் 16 மாநிலங்களை சேர்ந்த மாநில குங்பூ செயலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக 16 மாநிலங்களை சேர்ந்த வீரர்களின் அணி வகுப்பு மற்றும் 

 இதனைத்தொடர்ந்து வீரர்களுக்கிடையே போட்டிகள் விருவிருப்பாக நடைபெற்றது. இரண்டுநாட்கள் தொடர்ந்து இந்த குங்பூ போட்டிகள் நடைபெறும் அதனையடுத்து வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணியினருக்கு  பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ள.




Recommended For You