PUBLIC NEWS TV- ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ, பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்!?.

PUBLIC NEWS TV- ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ, பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்!?.

PUBLISHED:29-Nov-2017

வாகனங்களுக்கு தேவையான ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் சிப்காட் பகுதியில் நுற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் கனரக வாகனங்கள்,இருசக்கர வாகனங்கள், கிரானைட்,வயர்கள்,ரப்பர் என பல வித பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. முக்கண்டபள்ளி அருகில் கனரக வாகனங்களுக்கு தேவையான ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றர். நேற்று தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றியது.

இந்த தீ தொழிற்சாலையின் பல பொருட்கள் மளமள என தீ பிடித்து எரிந்து சாம்பலானது. இது குறித்து சிப்காட் பகுதியில் உள்ள தீ யணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று தீ அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து சிப்காட் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்  விபத்து மின்சார கசிவால் ஏற்பட்டதாக இருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது.




Recommended For You