PUBLIC NEWS TV- இரயில்களின் தாமதத்தை கண்டித்து பயணிகள் மனித சங்கிலி போராட்டம்.

PUBLIC NEWS TV- இரயில்களின் தாமதத்தை கண்டித்து பயணிகள் மனித சங்கிலி போராட்டம்.

PUBLISHED:06-Dec-2017

கிருஷ்ணகிரி;- 


ஓசூரில், இரயில்களின் தாமதத்தை கண்டித்து இரயில் பயணிகள் மனித சங்கிலி போராட்டம்  


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இரயில்களின் தாமதத்தை கண்டித்தும், ஓசூர் பெங்களுர் இடையே மின்சார இரயில்கள், இரட்டை வழிப்பாதை அமைக்க வலியிறுத்தியும் இரயில் பயணிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

ஓசூரிலிருந்து தினந்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பெங்களுக்கு பணிக்கு சென்று வருகின்றனர். மத்தியஅரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் இவர்கள் இரயில்களின் தாமதத்தால் அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வேலை இழப்பு, பனிச்சுமை போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.  
 

இந்த நிலையில்  பணிக்கு செல்வதற்காக இரயில்வே நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இரயில்களின் தாமதத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரயில் தாமதத்தை தவிர்க்க உரிய நேரத்திற்கு இரயில்களை இயக்கவேண்டும், ஒரு இரயிலின் தாமதம் அடுத்தடுத்த இரயில்களை பாதிக்கின்றனது.

இதனால் அனைத்து பயணிகளும் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறினர்.
மேலும் ஓசூர் & பெங்களுர் வரை இரட்டை இரயில் வழித்தடம், மின்சார இரயில்களை இயக்குவது போன்ற கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தினால் பயணிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் இதனால் இரயில்வே நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு நடைமுறை படுத்த வேண்டும் என பயணிகள் கேட்டுக்கொண்டனர்.  

 

பேட்டி :- 

1, ஜெய்குமார் & பயணி, தனியார் கம்பெனி ஊழியர். ஓசூர்.
       

2, மலர்கொடி & பயணி, தனியார் நிறுவன ஊழியர். ஒசூர்




Recommended For You