PUBLIC NEWS TV- மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டங்கள் தொடரும் என எச்சரிக்கை.

PUBLIC NEWS TV- மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டங்கள் தொடரும் என எச்சரிக்கை.

PUBLISHED:13-Dec-2017


ஓசூரில் இரண்டாவது நாளாக பி .எஸ் .என் .எல் ,ஊழியர்கள் வேலை நிறுத்தம். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டங்கள் தொடரும் என எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பி எஸ் என் எல் ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு ஏற்படுத்தாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் எச்சரித்தனர்.
ஊதியகுழு பரிந்துரைகளை வழங்க வேண்டும், பரிந்துரையில் உள்ள பிழைகளை திருத்த வேண்டும், செல்போன் கோபுரங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நேற்றும் இன்றும் இந்திய நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் பி எஸ் என் எல் ,ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பி எஸ் என் எல்.,அலுவலகம் முன்பு இன்றும் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள், இப்போதும், மத்திய அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இதற்கு தீர்வு ஏற்படுத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அப்போது எச்சரிக்கை விடுத்தனர்.

பேட்டி : பி. குஞ்சு, கிளை செயலாளர், பி எஸ் என் எல் ஊழியர் சங்கம்




Recommended For You