PUBLIC NEWS TV- நியாய விலை கடைக்கு 3000 ரூபாய் வாடகை செலுத்தும் கிராம மக்களின் அவல நிலை!?.

PUBLIC NEWS TV- நியாய விலை கடைக்கு 3000 ரூபாய் வாடகை செலுத்தும் கிராம மக்களின் அவல நிலை!?.

PUBLISHED:25-Dec-2017

கிருஷ்ணகிரி;-

ஓசூர் அடுத்த உளியாளம், இனப்பசந்திரம் மற்றும் விஸ்வநாதபுரம் உள்ளிட்ட  மூன்று கிராமங்களிள் சுமார் 800க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மூன்று கிராமங்களுக்கும் பொதுவாக ஒரு அரசு நியாய விலை அங்காடி வாடகை கட்டிடத்தில் இயங்கிவருகிறது.

மேலும் இந்த நியாய விலை அங்காடியில் சுமார் 600க்கும் மேற்ப்பட்ட குடும்ப அட்டைகள் தாரர்கள் அரிசி, சக்கரை, கோதுமை, பாமயில் மற்றும் பல பொருட்க்களை வாங்கி பயன்பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் உளியாளம் கிராமத்தில் இயங்கி வரும் நியாய விலை அங்காடியானது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது ,இதற்க்கு மாதம் 3000 ரூபாய் வாடகையாக செலுதபடுகிறது.

 நியாய விலை அங்காடிக்கான வாடகை பணத்தை குடும்பஅட்டை  வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிற்க்கும் 300 ரூபாய் வீதம் வாசுலிக்கப்பட்டு மாத வாடகை கட்டி வருவதாக உளியாளம் , இனப்பசந்திரம் மற்றும் விஸ்வநாதபுரத்தின் கிராம பொதுமக்கள் கூறுகிறார்கள்.

 

மேலும் மாவட்ட நிர்வாகம் இதை கவணத்தில் கொண்டு உடனடியாக  ஒரு நியாய விலை அங்காடியை அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கும் வகையில் வழி வகுக்க வேண்டும்.
இல்லையேனில் மூன்று கிராமங்கள் ஒன்று சேர்ந்து  பெறும் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் எச்சரித்துள்ளார்..




Recommended For You