PUBLIC NEWS TV-விளையாட்டு துறையை முறையாக பயன்படுத்தி பயன் பெறுமாறு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வேண்டு

PUBLIC NEWS TV-விளையாட்டு துறையை முறையாக பயன்படுத்தி பயன் பெறுமாறு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வேண்டு

PUBLISHED:26-Dec-2017

கிருஷ்ணகிரி

விளையாட்டு துறையில் சிறந்து விளங்க தமிழக அரசு சார்பில் பல கோடி நிதி ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது..

முறையாக பயன்படுத்தி பயன் பெறுமாறு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வேண்டுகோள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் பெஸ்டோ- ஸ்போர்ட்ஸ் - 2017 விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில் சமாதான புறா, வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. இந்த விளையாட்டு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பிறகு பேசிய அமைச்சர், தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை தீட்டி, பல கோடி ரூபாய் நிதியும் ஒத்துக்கினார். அதே போல தற்போதுள்ள முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு விளையாட்டு மேம்பாட்டிற்காக சுமார் 5 கோடி ரூபாய் வரை ஒத்துக்கியுள்ளார். அதனை பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டு வீரர்கள் முறையாக பயன்படுத்தி மென்மேலும் அகில இந்தியா மற்றும் உலக அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
போட்டிகளை காண ஆயிரக்கனக்கான பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 




Recommended For You