PublicNewsTv-குடியிருப்புகளுக்குள் புகுந்த 74 பாம்புகளை பிடித்து காப்பு காட்டில் விட்ட வனத்துறையினர்

PublicNewsTv-குடியிருப்புகளுக்குள் புகுந்த 74 பாம்புகளை பிடித்து காப்பு காட்டில் விட்ட வனத்துறையினர்

PUBLISHED:27-Dec-2017

கிருஷ்ணகிரி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த 40 மலைப்பாம்புகள் உட்பட 74 பாம்புகளை வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

கிருஷ்ணகிரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் மலைப்பாம்புகள் வந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த பாம்புகளைப் பிடித்து காப்புக்காடுகளில் விட்டனர்.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் நாகேஷ் கூறும்போது, ‘கிருஷ்ணகிரியைச் சுற்றி உள்ள காவேரிப்பட்டணம், தட்டக்கல், பர்கூர், வரட்டனப்பள்ளி, வேப்பனஹள்ளி, தொகரப்பள்ளி, மகராஜகடை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் 9 சாரை பாம்புகள், 10 நாகப் பாம்புகள், 40 மலைப் பாம்புகள், 5 மண்ணுளி பாம்புகள், ஒரு தண்ணீர் பாம்பு, 9 கண்ணாடி விரியன் பாம்புகள், ஒரு உடும்பு, 47 குரங்குகள் பிடிக்கப்பட்டன.

இவை, பர்கூர், வரட்டனப்பள்ளி, நாரலப்பள்ளி காப்புக்காடுகளில் விடப்பட்டன. பாம்புகள் ஊருக்குள்ளோ, குடியிருப்புகளுக்குள்ளோ வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.




Recommended For You