PUBLIC NEWS TV-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 97 லட்சம் ரூபாய் நலத் திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

PUBLIC NEWS TV-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 97 லட்சம் ரூபாய் நலத் திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

PUBLISHED:10-Jun-2018

ஒசூர் அருகே நாட்டி இன பால் குளிரூட்டும் மையத்தில் அமைச்சர் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்

 இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கப் பட்ட நாட்டி இன பசுக்களின் பால் குளிரூட்டும் மையத்தின் மூலம்  ஆண்டுக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பதப் படுத்தப் பட்டு, ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்  -  நாட்டி இன பால் குளிரூட்டும் மையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் , 250 நபர்களுக்கு 97 லட்சம் மதிப்பிலான லாப பங்கீடுகளை மாநில விளையாட்டு துறை அமைச்சர்  பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கி பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த ஆண்டு சுமார் ஒரு கோடி மதிப்பில் நாட்டி இன பால் சேமிப்பு மற்றும் குளிரூட்டும் மையம் திறந்து வைக்கப் பட்டது. இந்த மையத்தை சுற்றி உள்ள 19 ஆயிரம் நாட்டி இன பசு வளர்க்கும் விவசாயிகள் , தங்களின் பசுக்களை இன விருத்தி செய்யவும், பால் விற்பனை செய்யவும் இந்த மையம் அமைக்கப் பட்டது.  இந்த மையத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில விளையாட்டு துரை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்துக் கொண்டு விவசாயிகளிடம் பயன்கள் குறித்து  கேட்டறிந்தார். பின்னர், லாப பகிர்வு, இன விருத்தி செயல் முறை மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும்   முப்பெரும் விழா நடைபெற்றது. பின்னர் உரையாற்றிய அமைச்சர், இந்தியாவிலேயே நாட்டி இன பசுக்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்த பகுதியில் குளிரூட்டப்பட்ட மையம் தொடங்கி வைக்கப் பட்டது. சிறந்த சத்து நிறைந்த பால், ஒரு லி 43 வரை கொள் முதல் செய்து, குளிரிட்டப் பட்டு 55 வரை விற்பனை செய்து, ஓசூர், பெங்களூரு, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்ப படுகிறது. இங்குள்ள ஆயிரம் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இந்த மலைக் கிராமப் பகுதிகளில் 19 ஆயிரம் நாட்டி இன பசுக்கள் உள்ளன. அவற்றை மேலும் இன விருத்தி செய்து, கொள் முதல் அளவை வரும் காலங்களில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க படும். இந்த மையத்தில் இதுவரை ஆயிரம் விவசாயிகள் வரை உறுப்பினராக சேர்ந்துள்ளனர். அதனை மேலும் அதிகரித்து இந்தியாவிலேயே சிறந்த மையமாக இவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்க படும் என்று கூறினார்.

பின்னர், லாப பங்கீடு மற்றும்  பல்வேறு துறைகளை சேர்ந்த 250 பயனாளிகளுக்கு, 97 லட்சம் ரூபாய் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்




Recommended For You