PUBLICNEWSTV-ஐஏஎஸ் பயிற்சி மாணவி டெல்லியில் தற்கொலை,போலீஸ் சோதனையில் கடிதம் சிக்கியது..!

PUBLICNEWSTV-ஐஏஎஸ் பயிற்சி மாணவி டெல்லியில் தற்கொலை,போலீஸ் சோதனையில் கடிதம் சிக்கியது..!

PUBLISHED:29-Oct-2018

புதுடெல்லி:-

டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த தமிழகத்தை  சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் கிராமம் குட்டைத்தோட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயியான இவர், சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க துணை செயலாளராக உள்ளார். மனைவி மகாதேவி.

இவர்களது மகள் ஸ்ரீமதி (21). மகன் வருண்சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் படித்த மதி 10ம் வகுப்பில் 493 மதிப்பெண்களும், கோபியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பில் 1103 மதிப்பெண் பெற்றதால் கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. சோசியாலஜி படித்து முடித்தார்.

இதையடுத்து, ஐ.ஏ.எஸ். படிக்கவேண்டும் என்பதற்காக டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி  நிறுவனத்தில், கடந்த 6 மாதங்களாக பயின்று வந்தார்.

தனியார் மகளிர்  விடுதியில் தங்கியிருந்த ஸ்ரீமதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார்.

நேற்று காலை அவரது உடலை பார்த்த சக நண்பர்கள், விடுதி  நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதுகுறித்து கரோல் பாக் போலீசில் தகவல்  தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று ஸ்ரீமதியின் உடலை  ஆர்.எம்.எல்  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து,  ஸ்ரீமதியின் பெற்றோருக்கு டெல்லி போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதன்பின், போலீசார் விசாரணை நடத்தினர். தற்கொலை செய்வதற்கு முன்பாக, ஸ்ரீமதி ஒரு கடிதத்தை எழுதி அவரது அறையில் ைவத்திருந்தார்.

போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்ட அந்தக் கடிதத்தில், ‘எனக்கு டெல்லி சூழல் பிடிக்கவில்லை.

சொந்த பிரச்னைக்காக  தற்கொலை செய்து கொள்கிறேன். இது எனது தவறுதான். தம்பியை நல்லமுறையில்  பார்த்துக்கொள்ளவும்’ என குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 15 நாட்களாக  ஸ்ரீமதி ஐ.ஏ.எஸ். அகடாமிக்கு செல்லவில்லை என விசாரணையில் தெரியவந்தது.

இன்று ஸ்ரீ மதியின் உடல் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார்  தெரிவித்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஸ்ரீமதியின் பெற்றோர், உறவினர்கள்  டெல்லி மருத்துவமனைக்கு வந்தனர்.

மகளின் சடலத்தை கண்டு கதறி  அழுதனர். ஸ்ரீ மதியின் தாயார் மகாதேவி கூறுகையில்,

‘‘எனது  மகள் கடந்த 6 மாதங்களாக இங்கு படித்து வந்தார். பிரச்னை எதுவும் இருப்பதாக  எங்களிடம் தெரிவிக்கவில்லை.

எங்களது உறவினரான காந்திகுமார் என்பவர்  டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார்.

அவரது மேற்பார்வையில்தான்  படித்து வந்தார். அவரிடத்திலும் மதி எதுவும் கூறவில்லை.

நேற்று மதியம்தான் செல்போனில் என்னிடம் பேசினாள். அப்போதும் இயல்பாகத்தான்  பேசினாள்’’ என்று கண்ணீருடன் கூறினார்.

மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் தகவல்மாணவி ஸ்ரீமதியின் இறப்பு குறித்து, உறவினர்கள் கூறுகையில், `டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை.

இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மாநில அரசு விரைவான நடவடிக்கையை எடுத்து உண்மையை கண்டறியவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர்.




Recommended For You