PublicNewsTv-மூளை அறுவை சிகிச்சையின் போது கேம் விளையாடிய சிறுமி.

PublicNewsTv-மூளை அறுவை சிகிச்சையின் போது கேம் விளையாடிய சிறுமி.

PUBLISHED:12-Sep-2017

 

சென்னையை சேர்ந்த 10 வயது சிறுமி நந்தினி. 5-ம் வகுப்பு படிக்கிறாள். பரதநாட்டிய கலையரங்கில்  திடீரென வலிப்பு ஏற்பட்டது.

இதனால் பதறி துடித்த பெற்றோர் அவரை வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி நந்திக்கு  அவளது மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதை அகற்றாவிடில் உடலின் பாதி பகுதி செயலிழந்துவிடும். அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே உடனடியாக ஆபரேசன் நடத்த வேண்டும் என பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

பெற்றோரின் சம்மதத்தை தொடர்ந்து சிறுமிக்கு ஆபரேசன் நடத்தப்பட்டது. பொதுவாக மூளையில் ஆபரேசன் நடைபெறும் போது மருந்து கொடுத்து மண்டை ஓடு அகற்றப்பட்டு கட்டி அகற்றப்படும் அல்லது ஆபரேசன் செய்யும்போது ஒருவேளை தவறான நரம்பின் மீது கை பட்டால் கூட உடலில் வலிப்பு ஏற்பட்டு பாதி பகுதி செயலிழந்துவிடும்.

எனவே டாக்டர் ரூபேஸ்குமார் அந்த முறையை கையாளாமல் மயக்க மருந்து கொடுக்காமல் சிறுமியை விழிப்புடனும், வழக்கமான செயல்பாட்டுடன் இருக்க செய்தும் ஆபரேசன் செய்தனர்.

மூளை கட்டி ஆபரேசன் நடத்த போது சிறுமி நந்தினி தனது மாமாவின் ‘ஸ்மார்ட்’ செல்போன் மூலம் தனக்கு மிகவும் விருப்பமான ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஆபரேசன் செய்த டாக்டருடன் பேசிக் கொண்டும் கை கால்களை அசைத்துக் கொண்டும் இருந்தாள். இந்த ஆபரேசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்போது டாக்டருடன் அவரது மாமாவும் உடன் இருந்தார். புதுச்சேரியை சேர்ந்த இவரும் ஒரு டாக்டர் தான்.

பொதுவாக இது போன்ற ஆபரேசன் 2 சதவீதம் நோயாளிகள் அதுவும் பெரியவர்களுக்கு தான் நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மிக அரிதாக இத்தகைய ஆபரேசன் நடைபெறும். அதே போன்று சிறுமிக்கு செய்யப்பட்டுள்ளது. இதனை ‘சிம்ஸ்’ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டைரக்டர் டாக்டர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

மூளையில் உள்ள  கட்டி ஆபரேசனின் போது நோயாளிகளுக்கு வலி எதுவும் தெரியாது. பொதுவாக மூளை தான் உடலில் ஏற்படும் வலியை தெரிவிக்கும் ஒரு கருவி. ஆனால் கட்டி இருப்பதால் மூளை நரம்பின் வலியை உடலுக்கு தெரியபடுத்தாது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.




Recommended For You