சென்னை இராயபுரம் கிழக்கு கல்லறை சாலை குடியிருப்பு மத்தியில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு திடலில் சமூக விரோதிகள் அட்டூழியம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில் போன்றவற்றை வீசி செல்கின்றனர்.
எனவே காவல்துறையினர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.