தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் , தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் , பள்ளிக்கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி , மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , மீன்வளம் , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் , உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு , வருவாய் , பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , தலைமை செயலாளர் க.சண்முகம் , இ.ஆ.ப. , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை , கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா , இ.ஆ.ப. , உள் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் , இ.ஆ.ப. , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் , இ.ஆ.ப. , கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி , இ.ஆ.ப. , காவல் துறை தலைமை இயக்குநர் J.K. திரிபாதி , இ.கா.ப. , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.