PUBLIC NEWS TV - இராயபுரத்தில் அம்மா மினி கிளினிக் முதல்வர் திறந்து வைத்தார்.

PUBLIC NEWS TV - இராயபுரத்தில் அம்மா மினி கிளினிக் முதல்வர் திறந்து வைத்தார்.

PUBLISHED:14-Dec-2020

பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் 5 சார்பாக, சென்னை இராயபுரம்  தொகுதிக்குட்பட்ட சேக் மேஸ்திரி தெருவில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்டார்கள். 

உடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்,  ஆகியோர் உள்ளனர். 

மேலும் இதில் இராயபுரம் பகுதி செயலாளர்கள் ஏ.டி.அரசு, மகேஷ் வடசென்னை மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால், திருவெற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன், பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், மற்றும்  மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You