PUBLIC NEWS TV - இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது முதல்வர் பழனிச்சாமி பெருமிதம்.!

PUBLIC NEWS TV - இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது முதல்வர் பழனிச்சாமி பெருமிதம்.!

PUBLISHED:28-Mar-2021

இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பெருமிதம்..!

சென்னை இராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் டி.ஜெயக்குமாரை ஆதரித்து, 

இராயபுரம் கல்மண்டபம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியபோது, 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியிலே மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே தெரியாது.

எண்ணிப்பாருங்கள், அது ஒரு இருண்ட ஆட்சி. கடுமையான மின்வெட்டு, புரட்சித்தலைவி அம்மா 2011 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்கும் பொழுது, தமிழ்நாட்டை மூன்றாண்டுகளில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தார்கள்.

அதன்படியே செயல்படுத்தி காட்டினார்கள். அவர்கள் வழியில் செயல்படும் தமிழக அரசும் தொடர்ந்து செயல்பட்டதன் விளைவாக, மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார்கள்.

தடையில்லா மின்சாரம் தமிழகத்திலே கிடைக்கின்றது. அதிலும் இது மாநகரப்பகுதி ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லை என்றாலும் மக்களால் வீட்டினுல் இருக்க முடியாது.

இன்றைக்கு அப்படி இல்லை. ஆனால், தி.மு.க ஆட்சியில் அப்படித்தானே இருந்தது. இதுதான் அதிமுகவிற்கும் தி.மு.க ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு. மக்கள் கஷ்டப்படக்கூடாது.

மக்கள் மகிழ்ச்சியோடு வாழக்கூடிய அரசு அதிமுக அரசு என்பதை செயல்வடிவத்தில் காட்டுக்கொண்டிருக்கின்றோம். மழை வந்தாலும், புயல் வந்தாலும் மின் தடை இருக்கக் கூடாது என்பதற்காக சென்னை மாநகரத்தில் பூமிக்கடியில் மின்சார வயர்கள் பதிக்கப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

எந்த சூழ்நிலை வந்தாலும், மக்களுடைய கஷ்டங்களைப் போக்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. 

அதனால் தான் தமிழகம் வளர்ச்சிப் பாதையினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

வெற்றிநடை போடும் தமிழகம் என்று சாதரணமாக நாங்கள் கூறவில்லை. செயல்படுத்தி காட்டியிருக்கின்றோம். மக்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள், நாங்கள் மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்துகின்றோம்.

ஆனால், மு.க.ஸ்டாலின் வெற்றிநடை போடும் தமிழகம் என்றால், பயப்படுகிறார், பதறுகின்றார். அவருடைய ஆட்சியில் நாட்டுமக்களுக்காக எதுவுமே செய்யவில்லை.

வீட்டுமக்களைத்தான் பார்த்தார்கள். நாட்டுமக்களை பார்த்திருந்தால், அவர்களது கஷ்டம், துன்பம், வேதனை ஏதாவது தெரிந்திருக்கும், எதுவுமே தெரியாத தலைவர் ஸ்டாலின். 

அண்ணா தி.முகவைப் பொறுத்தவரையில் நாட்டுமக்களுக்கு எது, எது, எந்தெந்த நேரத்தில் வேண்டும் என்பதை நாங்கள் பார்த்து சரியான நேரத்தில் அதனைச் செய்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிற சூழ்நிலையைப் பார்க்கின்றோம். அதோடு தமிழகத்தில் மதச்சண்டை கிடையாது, ஜாதிச்சண்டை கிடையாது அமைதிப்பூங்கவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ரௌடி ராஜ்ஜியம் கிடையாது. இங்கே ரவுடி ராஜ்ஜியமோ, கட்டப் பஞ்சாயத்தோ, புத்தகத்தை தூக்கிக்கொண்டு கடை, கடையாகச் சென்று வசூலிப்பதோ கிடையாது, அதற்கெல்லாம் அனுமதியும் கிடையாது.

கிராமத்திலிருந்து வந்தவர் என்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

ஆனால், நான் எதை நினைத்தாலும் அதை சாதிக்கக் கூடியவன், எதற்கும் அஞ்சமாட்டேன். நான் முதலமைச்சராக நான்காண்டு காலம் முடிந்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன்.

இந்த நான்காண்டு காலங்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்தளவிற்கு சிறப்பாக இருந்தது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, குற்றம் செய்பவர்களை பிடித்து தகுந்த தண்டனையை கொடுக்கின்றோம். தமிழ்நாட்டில் இப்போது குற்றமே நடைபெறவில்லையா? என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறார்.

உலகளவில் அனைத்து இடங்களிலும் குற்றங்கள் நடைபெறத்தான் செய்யும். ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் குற்றங்களை நாங்கள் குறைத்திருக்கின்றோம்.

ஒரு வளமான தமிழகத்தை உருவாக்கி இருக்கிறோம். தமிழகத்தில் இப்போது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

கல்வியில், மருத்துவத்தில் புரட்சி, மறுமலர்ச்சி என அனைத்து துறைகளிலும் வளர்ந்து இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றார்.




Recommended For You