PUBLIC NEWS TV - திருவொற்றியூர் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.

PUBLIC NEWS TV - திருவொற்றியூர் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.

PUBLISHED:03-Apr-2021

திருவொற்றியூர் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேக்காடு பகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் அதிமுக சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 29வது வட்ட கழக செயலாளர்கள் ராகவா சாக்ரடீஸ் , R.சிவகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் புதுகை மு.பாண்டியன் , கிழக்கு பகுதி செயலாளர் அஜாக்ஸ் S.பரமசிவம், மேற்கு பகுதி அவைத்தலைவர் சாரதி பார்த்திபன் ஆகியோர் அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி அதிமுக வேட்பாளர் கே.குப்பன் அவர்கள் வெற்றிபெற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று சிறப்புரையாற்றினர். 

இதில் மாவட்ட பொருளாளர் P.ராஜேந்திரன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.ரவிக்குமார், இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் தாங்கல் ரவி உள்ளிட்ட மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் இருந்தனர்.




Recommended For You