PUBLIC. TV TAMIL - திருவொற்றியூரில் T.சண்முகனார் இரவு பள்ளி & 8வது வட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா.

PUBLIC. TV TAMIL - திருவொற்றியூரில் T.சண்முகனார் இரவு பள்ளி & 8வது வட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா.

PUBLISHED:20-Oct-2021

சென்னை திருவொற்றியூர் எஸ்.பி கோயில் தெருவில் உள்ள T.சண்முகனார் இரவு பள்ளி மற்றும் 8வது வட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா வழக்கறிஞர் C.தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் S.சுதர்சனம் , சட்டமன்ற உறுப்பினர் K.P.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து , ஏழை-எளிய தாய்மார்களுக்கு புடவைகள் , பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்கள்.

இதன் முன்னதாக கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னால் மாமன்ற உறுப்பினரும், மன்றத்தின் நிறுவனருமான தெய்வத்திரு க.சிவலிங்கம்  அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு பகுதி அவைத் தலைவர்  ராமநாதன் , கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு , 5வது வட்ட செயலாளர் கே.பி.சொக்கலிங்கம் , 8வது வட்ட செயலாளர் டி.சி.வி.மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




Recommended For You