திருவொற்றியூர் மற்றும் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கான நேர்காணல்

திருவொற்றியூர் மற்றும் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கான நேர்காணல்

PUBLISHED:10-Jan-2022

திமுக சார்பில் திருவொற்றியூர் மற்றும் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கான நேர்காணல்.. 

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னை வட கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திருவொற்றியூர் தொகுதி மற்றும் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஏராளமான கட்சி நிர்வாகிகளிடம் விருப்பமனு பெறப்பட்டது.

இந்த நிலையில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ , கலாநிதி வீராசாமி எம்பி , திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோர் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினர்.

இதில் திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 4வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த மேற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமாரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

இதில் பகுதி செயலாளர்கள் துக்காராம், தி.மு.தனியரசு உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் , விருப்ப மனு அளித்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You