விபத்து ஏற்படும் முன் சாலையை சரி செய்யுங்கள்.. அதிரடி காட்டிய திமுக மாமன்ற உறுப்பினர்…

PUBLISHED:25-Mar-2022

விபத்து ஏற்படும் முன் சாலையை சரி செய்யுங்கள்.. உடனடியாக களமிறங்கிய திமுக மாமன்ற உறுப்பினர்…

சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்தில் இருந்து எல்லையம்மன் கோவில் செல்லும் மேற்கு மாட வீதி சாலை முழுவதும் குண்டும் குழியுமாக இருப்பதால் நாள்தோறும் விபத்து ஏற்படுவதாக 10வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் தி.மு.தனியரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து உடனடியாக மேற்கு மாட வீதி சாலையை சீரமைக்கும் பணியில் திருவொற்றியூர் கிழக்கு திமுக பகுதி செயலாளரும், 10வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தி.மு.தனியரசு மாநகராட்சி பணியாளர்களுடன் களமிறங்கினார்.

இதனால் ஒரு மணி நேரத்தில் மேற்கு மாட வீதி சாலை சீரமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் சென்றனர்.

தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக களத்தில் இறங்கிய மாமன்ற உறுப்பினர் தி.மு.தனியரசுக்கு அப்பகுதி பொதுமக்களும்  வியாபாரிகளும் நன்றி தெரிவித்தனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source