PublicNewsTv- டிடிவி.தினகரன் விரைவில் ‛ மாமியார் ' வீட்டுக்குத்தான் போவார்.முதல்வர் ஆவேச பேச்சு!!

PublicNewsTv- டிடிவி.தினகரன் விரைவில் ‛ மாமியார் ' வீட்டுக்குத்தான் போவார்.முதல்வர் ஆவேச பேச்சு!!

PUBLISHED:16-Sep-2017

சென்னை;

வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா  தலைமையிலும் அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்னிலையிலும்    துறைமுகம் தொகுதி தங்கசாலையில்  நடைபெற்ற பொதுக்கூட்டம் விழாவில்  முதல்வர் கே.பழனிசாமி  கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜெயலலிதா இருக்கும் வரை சென்னை பக்கம் கூட டிடிவி.தினகரன் வந்தது இல்லை. ஆனால், அனைவருக்கும் சீட் வாங்கி கொடுத்ததாகவும், பதவி வாங்கி கொடுத்ததாகவும் கூறி வருகிறார். ஆட்சியை கலைக்கும் டிடிவி.தினகரன் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சிக்கும், ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சிக்கும், டிடிவி.தினகரன் துரோகம் இழைக்க பார்க்கிறார்.

எங்களை வீட்டிற்கு போக சொல்கிறார். நாங்கள் வீட்டிலிருந்துதான் விழாவிற்கு வந்தோம். விழா முடிந்ததும், மீண்டும் வீட்டிற்குதான் செல்வோம். ஆனால், வீட்டில் இருந்து வந்த டிடிவி.தினகரன் விரைவில் ‛ மாமியார் ' வீட்டுக்குத்தான் போவார். அதனை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். இங்கு நடப்பது அனைத்தையும் ஜெயலலிதா ஆத்மா கவனிக்கிறது. துரோகம் செய்தவர்களை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது. ஒவ்வொருவராக வாட்டி வதைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்ட விழா மேடையில் வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா முதல்வருக்கு வீரவால் வழங்கினார்

திண்டுக்கல்

 அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:- ஜெயலலிதா சிகிச்சைக்காக படுத்த படுக்கையாக இருந்தார். அவரை பார்க்க வந்த கவர்னர், அமித்ஷா, அருண் ஜெட்லி, ராகுல் ஆகியோரை கூட பார்க்க விடவில்லை. கண்ணாடி வழியாக கூட பார்க்க முடியவில்லை. மிகப்பெரிய தொற்றுநோய் உள்ளது, பார்த்தால் பாதிக்கும் எனக்கூறினார். ஆனால், சிகிச்சை அளித்த வார்டு பாய், நர்ஸ், டாக்டர் ஆகியோர் ஜெயலலிதாவை பார்த்தனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உண்மை என்னவென்றால், ஜெயலலிதாவை நேரில் சென்று யாராவது பார்த்தால், தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லிவிடுவார் என்ற பயம் காரணமாக யாரையும் பார்க்க விடாமல் கொலை செய்ததாக தகவல் வந்துள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்காக மருந்து வேண்டுமென்றால், உலகத்தின் எந்த மூளையில் இருந்தும் கொண்டு வந்திருக்க முடியும். இதற்கு அரசு தயாராக இருந்தது. ஜெயலலிதா நோய் முற்றி இயற்கையாக சாகட்டும் என அவர்கள் காத்திருந்தனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக வேண்டும். எடப்பாடியை விலக்க வேண்டும் என டிடிவி.தினகரன் திட்டமிட்டதை நாங்கள் புரிந்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்..




Recommended For You