PUBLIC NEWS TV-தமிழக அரசுக்கு தோழி அமைப்பு சார்பில் திருநங்கைகள் கோரிக்கை.

PUBLIC NEWS TV-தமிழக அரசுக்கு தோழி அமைப்பு சார்பில் திருநங்கைகள் கோரிக்கை.

PUBLISHED:19-Sep-2017

தமிழக அரசுக்கு"தோழி"  அமைப்பு சார்பில்  திருநங்கைகள்  கோரிக்கை 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தோழி அமைப்பின் அலுவலகத்தில்  பத்திரிகையாளர்  சந்திப்பு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அமைப்பு இயக்குனர்  சுதா கலந்து கொண்டு கூறியதாவது தமிழக அரசு தமிழகத்தில் திருநங்கைகள் ஐந்து ஆயிரம் நபர்கள் மட்டுமே உள்ளதாக  கூறியுள்ளது ஆனால் சென்னையில் மட்டுமே ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட  திருநங்கைகள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தேவையான ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆகிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கி கணக்கு துவங்கப்பட்டு அவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றோம் ஆனால் தமிழக அரசு சார்பில் எங்களுக்கு அனைத்து அடையாள அட்டைகளிளும் திருநங்கைகளுக்கு பதிலாக  பெண்கள் என அச்சிட்டு வழங்கியுள்ளது எங்களுக்கு வேதனையளிக்கிறது எங்கு சென்றாலும் திருநங்கைகளுக்குரிய  உதவிகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக  அவர் கூறினார்

மேலும் இது குறித்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் திருநங்கை சுஜாதா செய்தியாளர்களிடம் கூறியதாவது  எங்கள் அமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம்  தமிழக அரசு  குடியிருப்பு நிலங்கள் உதவித்தொகை  அனைத்தையும்  தாமதமாக  வழங்கி வருகிறது அது மட்டுமல்ல  எங்கள் தகுதிக்கு  ஏற்றாபோல் அரசு வேலைகள் வழங்க வேண்டும்  என்பதே எங்கள்   தோழி அமைப்பின் கோரிக்கை வைத்தார்.அருகில் திருநங்கைகள்  ஐஸ்வரியா,சாரா ஆகியோர்  இருந்தர்.

 




Recommended For You