PUBLIC NEWS TV- திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து இன்றும் நடைபெற உள்ளது.

PUBLIC NEWS TV- திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து இன்றும் நடைபெற உள்ளது.

PUBLISHED:20-Sep-2017

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  தொடர்ந்து இன்று  மாலையும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தற்போதய அரசியலில் ஏற்பட்டுள்ள  சூழல்  டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பல முறை திமுக சார்பில் கோரிக்கை வைத்தும் அதை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் ஜனநாயகப் படுகொலை செய்யும் வகையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக ஒரே நாளில் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோது ஆர்.கே.நகர் தொகுதி காலியானது என்று அறிவிக்க பேரவைத் தலைவர் 43 நாள்கள் எடுத்துக் கொண்டார்.

ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளையும் ஒரே நாளில் காலியானதாக அறிவித்தது உள்நோக்கம் கொண்டது. இதே அரசு பெரும்பான்மையை நிரூபித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் மீது ஏன் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை,

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (செப்.20) விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மாலை மீண்டும் சென்னை அண்ணா அறிவாயத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்தும், முதல்வர் கே.பழனிசாமி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரை கண்டித்தும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




Recommended For You