PUBLIC NEWS TV- சென்னை மாநகர ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் ஆப்ரேஷன் 'சாகர் கவாச்' நடைபெற்று வருகிறது.

PUBLIC NEWS TV- சென்னை மாநகர ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் ஆப்ரேஷன் 'சாகர் கவாச்' நடைபெற்று வருகிறது.

PUBLISHED:20-Sep-2017

 

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும்  தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை இன்று நடத்தப்படுகிறது. இதற்கு ஆப்ரேஷன் 'சாகர் கவாச்' (கடல் கவசம்) என்று பெயர். 36 மணி நேரம் நடக்கும் ஒத்திகையில் சென்னையில் இதுவரை 8 பேர் பிடிபட்டுள்ளனர்.

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ல் கடற்கரை வழியாக நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் எதிரொலியாக இந்திய அரசு, கடலோரப் பகுதி பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக ஆண்டு தோறும் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதற்கு ஆபரேஷன் 'சாகர் கவாச்' (கடல் கவசம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கியூ பிரிவு, மத்திய-மாநில உளவுத்துறை போலீஸார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் இதில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் சென்னையிலிருந்து குமரி வரை 13 கடலோர மாவட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஒத்திகை ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை நடத்தப்பட்டு வருகின்றன. ஆபரேஷன் ஹம்லா, ஆபரேஷன் ரக்க்ஷக், ஆப்ரேஷன் பேரிகார்டு என பல்வேறு பெயர்களில் இந்த ஒத்திகை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஆப்ரேஷன் சென்னையின் பாதுகாப்பு குறித்து முழு சுய பரிசோதனை செய்யும் ஆப்ரேஷன் ஆகும் , சென்னை மாநகர ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் இறங்கியுள்ளனர் .

தீவிரவாதிகள் போல் வேடமிட்ட கடலோர பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி போலி குண்டுகள், துப்பாக்கிகளுடன் சென்றடைவார்கள். வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள் என பல இலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரவாதிகள் போல் வேடமிட்டு உள்ளே நுழையும் கமாண்டோ காவலர்களை போலீஸார் தடுத்து பிடிக்கவேண்டும் அப்படி பிடிக்க தவறும் காவலர்களுக்கு ரிமார்க் வழங்கபடும்

இதனால் வணிக வளாகங்கள் , திரையரங்குகள், கோவில்கள், பொதுமக்கள் கூடும் முக்கிய ஸ்தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தடுப்பு அமைத்து போலீஸார் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் நடைபெறும் 36 மணி நேர 'சாகர் கவாட்ச்' ஆப்ரேஷன் நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது .

இந்த பாதுகாப்பு ஒத்திகையில் சென்னையில் இதுவரை 8 பேர் போலீஸாரிடம் சிக்கினர். கானாத்தூர், பெசன்ட் நகர், மெரினா கடற்கரை வழியாக ஊடுருவ முயன்ற 8 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.




Recommended For You