PUBLIC NEWS TV- பச்சிளம் குழந்தைகளை கடத்திய கும்பல் கூண்டோடு கைது.

PUBLIC NEWS TV- பச்சிளம் குழந்தைகளை கடத்திய கும்பல் கூண்டோடு கைது.

PUBLISHED:21-Sep-2017

சென்னை:- 

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்ட காவல்துறையினர், 

சேலத்தில் குற்றவாளி மற்றும் அவருக்கு உதவிய பெண்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ரயிலில் கடத்தப்பட்ட, 18 மாதங்கள் ஆன ஆண் குழந்தையையும் மீட்டனர்.

அந்த குழந்தையை 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி கோவை-சேலம் இன்டர்சிட்டி ரயிலில் ஒரு பெண்ணிடம் இருந்து கடத்தியதாக குற்றவாளி மணிமேகலை வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், அதே நாளில், கோவை - சேலம் இடையேயான ரயில் நிலையங்களில் குழந்தை காணாமல் போனதாக எந்த புகாரும் பதிவாகவில்லை

எனவே, 18 மாத ஆண் குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு மேலும் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில், அந்த குழந்தை, தன்னை கடத்தி வளர்த்து வந்த சேலம் மணிமேகலையை விட்டுப் பிரிய முடியாமல் அழுது கொண்டிருப்பதால், குழந்தையின் உடல் நலன் கருதி, குழந்தையை குற்றவாளிகளுடன் சிறையில் வைத்திருக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த மணிமேகலைக்கு (22) சுமார் 20 நாள்களுக்கு முன்பு, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த 18 -ஆம் தேதி மணிமேகலை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது 15 நாள்களே ஆன பெண் குழந்தையை ஒரு கும்பல் கடத்திச் சென்றது. 

இதுகுறித்து பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

விசாரணையில், இந்தக் குழந்தை கடத்தலில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை செய்யும் தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளி சுமித்ரா (33), சேலம் குகைத் தெருவைச் சேர்ந்த க.மணிமேகலை (29), அவரது தோழி ஐஸ்வர்யா (25) ஆகியோர்தான் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும்  கைது செய்து குழந்தையை மீட்டனர். 

இந்த வழக்கு விசாரணை குறித்து, சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையர் ஆர்.சுதாகர், பூக்கடை துணை ஆணையர் எஸ்.செல்வக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது.

இந்தச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் சேலம் மணிமேகலைத்தான். அவர்தான், குழந்தையைக் கடத்தும் நோக்கத்துடன் கடந்த 6 மாதங்களாக சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு, அடிக்கடி வந்து சென்றுள்ளார். 

அப்போது அங்குள்ளவர்களிடம் அவர், தான் காவல் துறை உதவி ஆணையர் என்றும், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் என்றும் இடத்துக்கு ஏற்றாற்போல பொய் கூறியுள்ளார்.

மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லும்போது, தன்னிடம் பழகிய தனியார் நிறுவன பாதுகாவலர் சுமித்ராவுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, தனது திட்டத்துக்கு மணிமேகலை பயன்படுத்தி உள்ளார். கடத்தப்பட்ட பெண் குழந்தையை, ரூ.30 ஆயிரத்துக்கு விற்பதற்கு ஒரு தரப்பிடம் மணிமேகலை பேசி வந்துள்ளார். இதில் அந்தக் கும்பல் மணிமேகலையுடனான தொடர்பை திடீரென துண்டித்துள்ளது. இதனால், தான் கடத்திய பெண் குழந்தையை மணிமேகலை தனது வீட்டில் வைத்திருக்கிறார்.

இந்தக் கும்பலிடம் சுமார் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தை குறித்து அவர்களிடம் விசாரித்ததில், அந்த கும்பல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணிடமிருந்து கடத்தியிருப்பது தெரிய வந்தது.




Recommended For You