PUBLIC NEWS TV-அரசு ஸ்டான்லி மருத்துவமனை காது,மூக்கு,தொண்டைப்பிரிவு சாதனை படைத்துள்ளது.

PUBLIC NEWS TV-அரசு ஸ்டான்லி மருத்துவமனை காது,மூக்கு,தொண்டைப்பிரிவு சாதனை படைத்துள்ளது.

PUBLISHED:23-Sep-2017

சென்னை அரசு  ஸ்டான்லி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவுக்கு   நாள் ஒன்றுக்கு 400 முதல்  450 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறனர்.

நவீன கருவியின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு  ஒரே நாளில் 7 நோயாளிக்கு  எண்டோஸ்கோப்பி  காது நுண்ணோக்கி அறுவை சிகிச்சை செய்து காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர்கள்  சாதனை படைத்துள்ளனர்.

8 வருடமாக காது கோளாறு  நோயால் பாதிக்கப்பட்டு வந்த   திருநெல்வேலியைச் சேர்ந்த   முருகேஸ்வரி  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உடனடி சிகிச்சை பெற்றார்  இதனை தொடர்ந்து  ராஜேஸ்வரி, முருகன், சுகன்யா, மோகன், கவுசல்யா, பத்மா ஆகியோருக்கு மருத்துவர்கள்  சிகிச்சை அளித்தனர்.

இந்த சாதனையை பேராசிரியர் எம்.என்.சங்கர் தலைமையிலான மத்துவர்கள்  அந்தோணி, முத்துசித்ரா ஆகியோரை கொண்ட குழுவினர் மிகவும் துள்ளியமாக எண்டோஸ்கோப்பி கருவியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு  சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம் நிருபர்களிடம்  கூறியதாவது.

ஸ்டான்லி மருத்துவமனையில் காது கோளாறுக்கு சிகிச்சை அளிக்க நான்கு நவீன கருவிகள் உள்ளன. சிகிச்சைக்காக 4 மருத்துவர்கள்  குழு செயல்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில்  பெற்றால் ரூபாய்  ஒரு லட்சம் முதல்  ரூபாய் இரண்டு  லட்சம் வரை செலவாகும் என்றும்.

மேலும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்கிறோம். முருகேஸ்வரி என்ற பெண்ணுக்கு கடந்த 8 ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்தது. காதுக்குள் உள்ள தசைகள் எலும்புகள் போல் இருந்ததால் அதை சரி செய்து தற்போது அவர் குணம் பெற்றுள்ளார். இந்த சிகிச்சை பெற்றவர்கள் அடுத்த நாளே வீட்டுக்கு செல்லலாம் என்று  அவர் கூறினார்.அருகில்   மருத்துவர்கள்                                              ஆர். எம்.ஓ.ரமேஷ், தனசேகர், செந்தில்நாதன்,கீதா ஆகியோர்  இருந்தனர்.




Recommended For You