PUBLIC NEWS TV- இன்றைய 29/9/2017 ராசிபலன்கள்

PUBLIC NEWS TV- இன்றைய 29/9/2017 ராசிபலன்கள்

PUBLISHED:29-Sep-2017

 

இன்றைய🕉🕉ராசிபலன்கள் 

                 29-09-2017

                      வெள்ளிக்கிழமை 

1.மேஷம் 

சட்ட விஷயங்களால் சில டென்சன்கள் வரும். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். இன்று நீங்கள் அறிவுரை கூறினால் - அறிவுரை பெறவும் தயாராக இருங்கள். உங்கள் இதயதுடிப்பு உங்கள் துணையின் துடிப்புடன் இணைந்து இன்று இனிய தாளம் போடும். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் - நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் - ஏதாவது காரணத்தால் - ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் - நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. வெளியாட்களின் ஆலோசனைப்படி நடக்காதீர்கள்.அதிர்ஷ்ட எண்: 2

2.ரிஷபம்

உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். தேவையில்லாத வாக்குவாதம் குடும்பத்தில் டென்சனை ஏற்படுத்தும். வாக்குவாதத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி நிஜமான வெற்றி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தவரையில் சிந்தனை திறமையால் இதைத் தவிர்க்கப் பாருங்கள். பிரச்சினைகளைத் தீர்க்க மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு, அமைதியாக யோசியுங்கள். அன்பின் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். பிசியான சாலையில், நீங்கள் உங்களை மிக சிறந்த அதிர்ஷ்டக்காரராக இன்று நினைப்பீர்கள் ஏனெனில் உங்கள் அன்புக்குரியவரே அனைவரை விட சிறந்தவர். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 2

3.மிதுனம்

இன்று உங்கள் உடல் லனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். நிச்சயமாக பண நிலைமை மேம்படும். ஆனால் குடும்பத்தில் ஒரு குழந்தையின் உடல் நலனுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். அன்புக்குரியவருடன் வெளியில் ஷாப்பிங் செல்லும்போது ரொம்ப கோபமாக இருக்காதீர்கள். பிசினஸ் மீட்டிங்குகளில் அதிகம் பேசுபவராகவோ உணர்ச்சிவயப்படவோ செய்யாதீர்கள் - உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் நற்பெயரை சீக்கிரம் கெடுத்துக் கொள்ளக் கூடும். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் துணைவர்/துணைவி பற்றி குறை கூற வேண்டாம். ஏற்கனவே அவர் மோசமான மன நிலையில் உள்ளார்.அதிர்ஷ்ட எண்: 9

4.கடகம்

மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். பள்ளிக்கூட பிராஜெக்ட்களை முடிக்க பிள்ளைகள் உங்கள் உதவியை நாடலாம். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண் மூலமாக வேலைக்கான வாய்ப்பு வரும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று ஒரு உறவினர் சர்ப்ரைஸ் தரக்கூடும். அதனால் நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விஷயம் தடைபடும். அதிர்ஷ்ட எண்: 3

5.சிம்மம்

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதை தவிர்த்துவிட முடியாது. சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். பின்னர் வருந்தக்கூடிய வகையில், பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாதீர்கள். உங்கள் இதயதுடிப்பு உங்கள் துணையின் துடிப்புடன் இணைந்து இன்று இனிய தாளம் போடும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் துணை திருமண பந்தம் பலவீனமாக இருப்பது போல உணரலாம். எனவே துணைவர்/துணைவி மேல் அக்கரை செலுத்துங்கள்.அதிர்ஷ்ட எண்: 2

 

6.கன்னி

மன அமைதிக்காக சில நன்கொடைகள் மற்றும் தர்ம காரியங்ளில் ஈடுபடுங்கள். பணம் தொடர்பாக நிச்சயமற்ற நிலை உங்கள மனதில் டென்சனை ஏற்படுத்தும். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். இன்று வேலை அழுத்தம் காரணமாக உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கூட நேரம் இருக்காது. 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம்.அதிர்ஷ்ட எண்: 9

7.துலாம்

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், தேவைப்பட்டால், நோய்த் தடுப்பு மருந்து சாப்பிடுங்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. ஆபீசில் இன்று நீங்கள் கோபமடைய நேரலாம். எனவே கவனம் தேவை. பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. சிறிய விஷயங்களுக்காக நீங்களும் துணைவரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். ஆனால் இது நீண்டகால அடிப்படையில் திருமண வாழ்வை பாதிக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பாதிருப்பதில் கவனமாக இருங்கள்.அதிர்ஷ்ட எண்: 2

 

8.விருச்சிகம்

தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். எந்தக் காரணம் கொண்டும் வீட்டின் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். மனதிற்கினியவருடன் இனிமையான நட்பைக் கெடுத்துவிடும். வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆனால் அதை எப்படி இம்ப்ரூவ் செய்வது என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால் அதையே திரும்பவும் செய்பவர்கள் முட்டாள்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள். அதிர்ஷ்ட எண்: 4

9.தனுசு

உங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நிலைக்கு மேல் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் சில விஷயங்களைத் தொடாமல் விட்டுவிடுவதே நல்லது. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுவீர்கள். அபீசில் உங்களது போட்டியாளர்கள் தங்களது தீய செயலுக்கான பலனை இன்று அனுபவிப்பார்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணை இன்று உங்களிடன் ஏமாற்றமடைவார். அதனை நீங்கள் சமாளிக்க வேண்டும்.அதிர்ஷ்ட எண்: 1

10.மகரம்

தாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் இன்று திருமண வாழ்வை பாதித்துவிடும். சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம். காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும் - எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். இன்று பொறுமயை கடைபிடிக்கவில்லையென்றால் உங்கள் திருமண வாழ்வில் ஒரு தரை இழைத்து விடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 

11.கும்பம்

பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். வீட்டில் சில மாற்றங்கள் அதிக சென்டிமெண்டாக அமையும் - ஆனால் அதிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்வுகளை நல்ல முறையில் உங்களால் வெளிப்படுத்த முடியும். சிலர் உங்களிடம் காதலை தெரிவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும்.அதிர்ஷ்ட எண்: 8 

12.மீனம்

பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். காதல் - துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் கோபத்தினால் சந்தேகம் தோன்றலாம் ஆனல் அது தவறென்று உங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் பந்தத்தின் மேல் சந்தேகம் தோன்றக்கூடும். அதிர்ஷ்ட எண்: 6




Recommended For You