PUBLIC NEWS TV-டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் வாரம் ஒரு முறை நடைபெறும்.

PUBLIC NEWS TV-டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் வாரம் ஒரு முறை நடைபெறும்.

PUBLISHED:02-Oct-2017

 

சென்னை:- 

டெங்கு காய்ச்சல்  தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில். டெங்கு ஒழிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்ககைள் குறித்து முதல்வர் அறிவுரை வழங்கினார். தேவையான மருந்துகள் கையிருப்பு மற்றும் வாங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையில் முழு  நேர சேவை நடத்தவும், தமிழகம் முழுவதும் டெங்கு குறித்த கண்டுபிடிப்பை உடனடியாக , பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தவும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு நாளாக கடைபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறும்படம் மூலம் பிரசாரம், நில வேம்பு கசாயம் மக்கள் கூடும் இடங்களில் வழங்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். மருத்துவர்கள் கண்காணிப்பில் 5 நாட்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்:- 

டெங்கு குறித்து பொதுமக்கள்  யாரும் பீதி அடைய வேண்டாம். தண்ணீரை வீட்டில் தேக்கி வைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




Recommended For You