PublicNewsTv- அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுவன் வயிற்றிலிருந்த பேட்டரி அகற்றம்.

PublicNewsTv- அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுவன் வயிற்றிலிருந்த பேட்டரி அகற்றம்.

PUBLISHED:04-Oct-2017

நாகை மாவட்டத்தை சேர்ந்த மதியழகன், தனம்  தம்பயின்  மூத்த மகன் தருண் (10 வயது ). சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது  கணிப்பான் மற்றும்  கணிபொறி  போன்றவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய பட்டன் போன்ற  பேட்டரியை விழுங்கி விட்டான். நாகை, தஞ்சாவூரில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வீடியோ எண்டோஸ்கோப் மூலம் பேட்டரியை அகற்ற முடிவு செய்தனர்.

இரைப்பை, குடல் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் மருத்துவர்  ரவிச்சந்திரன்,  சுகுமார், ஜெஸ்வந்த், பிரபாகரன், குமுதலிங்கராஜ், அருண்ராஜ் ஆகியோர் அடங்கிய  மருத்துவர்  குழுவினர் பேட்டரியை வீடியோ எண்டோஸ்கோப் மூலம் அகற்றினார்கள்.

இதுகுறித்து 
ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் பொன்னம்பல நமசிவாயம் கூறும்போது, “பட்டன் பேட்டரி வயிற்றில் 48 மணி நேரத்துக்கு மேலாக இருந்திருதால் அதில் உள்ள நச்சுதன்மை கொண்ட மருந்து  வெளியேறி உணவு குழாய் பாதித்து விடும். சரியான நேரத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்ததால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் உணவு குழாயில் இருந்த பேட்டரி அகற்றப்பட்டது” என்றார்.

சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்துமின்றி சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது.




Recommended For You