PUBLIC NEWS TV-த.மா.கா. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

PUBLIC NEWS TV-த.மா.கா. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

PUBLISHED:06-Oct-2017

சென்னை:-

த.மா.கா. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொவக்கி தனது உரையை தொடங்கினார் தமிழகம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக இந்த நோயை கண்டுபிடித்து தேவையான மருந்துகளை கண்டு பிடிக்கவும் சுகாதாரத்துறை தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதய விலைவாசி உயர்வுகளும், மக்கள் அவதிக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்புகள் தான்.

உலக சந்தையில் கச்சா எண்ணை விலை குறையும் போது அந்த அளவுக்கு பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யவில்லை. பெட்ரோலிய பொருட்களையும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வரவேண்டும். கலால்வரி, வாட்வரியை குறைத்து விலை குறைவை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், பொதுச்செயலாளர்கள் ஞானசேகரன், விடியல் சேகர், முனவர் பாஷா, சக்தி வடிவேல், கத்திப்பாரா ஜனார்த்தனம், தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம்.பிரபாகர், ஜி.கே.வெங்கடேஷ், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் கொட்டி வாக்கம் முருகன், சைதை மனோகரன், அண்ணாநகர் ராம்குமார், பிஜூசாக்கோ, பாலா,லூயிஸ்ராஜன், வில்லி வாக்கம் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, மாணவர் அணி தலைவர் சுனில் ராஜா, விக்டரி மோகன், கிண்டி மம்மு, சைதை நாகராஜ், ஜவஹர்பாபு, எல்.கே.வெங்கட், தி.நகர் கோதண்டன், துறைமுகம் செல்வகுமார், வேளச்சேரி மணிக்கண்ணன், லீக் பரமசிவம், மாதவரம் வினோபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You