PUBLIC NEWS TV-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

PUBLIC NEWS TV-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

PUBLISHED:07-Oct-2017

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சென்னையில் இருந்து 5000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18-ம் தேதி வருகிறது. இந்த பண்டிகையின்போது, சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதற்கிடைய, அக்டோபர் 16, 17-ம் தேதிகளில் அனைத்து தென்மாவட்ட விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டன. இருப்பினும், பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளில்தான் பயணம் செய்வார்கள்.

போக்குவரத்து நெரிசல்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தீபாவளி பண்டிகையின்போது, பொதுமக்களின் வசதிக்கு ஏற்றவாறு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக, சென்னையில் இருந்து மட்டுமே 5000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கடந்த ஆண்டு போல் அண்ணாநகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்கிடையே, தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது’’ என்றனர்.




Recommended For You