PUBLIC NEWS TV- டெங்கு கொசுக்களை ஒழிக்க நூறு டன் டயர்கள் அகற்றம் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

PUBLIC NEWS TV- டெங்கு கொசுக்களை ஒழிக்க நூறு டன் டயர்கள் அகற்றம் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

PUBLISHED:07-Oct-2017

டெங்கு கொசுக்களை ஒழிக்க நூறு  டன் டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

சென்னையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் உள்ளதாகவும் விரைவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்க நூறு டன் டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறிய அவர் இதற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தாகவும் கூறினார். 

மேலும் வீடுகளில் தேக்கி வைக்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உருவாகும் என்பதால், வாரம் ஒருமுறை அதனை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தினார்.




Recommended For You