PublicNewsTv-டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த அரசுக்கு அக்கறையில்லை,ஸ்டாலின் பேட்டி.

PublicNewsTv-டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த அரசுக்கு அக்கறையில்லை,ஸ்டாலின் பேட்டி.

PUBLISHED:10-Oct-2017

டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அக்கறையில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பா.ஜ., ஆட்சியில், எதிர்கட்சியினர் மீது உண்மையோ, பொய்யோ அதற்கு அப்பாற்பட்டு, முறைகேடு தொடர்பான புகார் வந்தால் அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை நடக்கிறது. அதுபோல், பாஜ., தலைவர் அமித்ஷா மகன் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மீது சோதனை நடக்குமா என்பது தான் எனதுகேள்வி. சீசர் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்படடவர் என்பது போல் மோடி அதனை நிருபிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை பொறுத்திருந்து பார்ப்போம்

டெங்கு காய்ச்சல் உழிரிப்பு குறித்து தமிழக அரசுக்கு கவலையில்லை. சுகாதார அமைச்சர்விஜயபாஸ்கருக்கு அக்கறையில்லை. வருமான வரி சோதனை வழக்கில் இருந்து தப்பிப்பது, குட்கா ஊழலில் இருந்து தப்பிப்பது குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறார். அதனையும் தாண்டி மைனாரிட்டியாக இருக்கும் ஆட்சியை நிலைநிறுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறார்.

இந்த ஆட்சியில் அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது.எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வேண்டாமென்றால் காழ்ப்புணர்வோடு சொல்வேன் எனக்கூறுவார்கள். அதில் காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சல் குறித்து காட்ட வேண்டும். இறப்பை தடுக்கும் சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.தலைமை செயலர், முதல்வர் எடப்பாடியுடன் கொள்ளை, கும்மாளத்திற்கு உடந்தையாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்

முன்னதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் இரண்டு டிஜிபிக்கள் பெயர்கள் எப்ஐஆரில் இல்லை என்றும், சாதாரண போலீஸ் அதிகாரிகள் பெயர் மட்டும் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஐகோர்ட் விசாரிக்க உத்தரவிட்ட ஒரு புகாரில், அலட்சியமாக டிஜிபி அந்தஸ்திலான அதிகாரிகள், அமைச்சரையும் காப்பாற்ற லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துணை போயுள்ளனர். .குட்கா விசாரணையை கண்காணிக்கும் பொறுப்பை விஜிலென்ஸ் ஆணையரிடம் ஐகோர்ட் மதுரை கிளை கொடுத்துள்ளதால், அமைச்சர், டிஜிபி மீது எப்ஐஆர் பதிவு செய்ய செய்ய தடையாக இருப்போர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.




Recommended For You