PublicNewsTv- ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் உலக மனநல தினம் விழிப்புணர்வு பேரணி.

PublicNewsTv- ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் உலக மனநல தினம் விழிப்புணர்வு பேரணி.

PUBLISHED:10-Oct-2017

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில்  உலக மனநல தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் 10ம் தேதியை உலக மனநல தினம் என அறிவித்துள்ளது. உடலும் மனமும் ஒன்றொடு ஒன்று தொடர்பு கொண்டவை. உடலுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது மனதை பாதிக்கும்; அதே போல் மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலை பாதிக்கும் மன நலத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஜோதிடத்திற்க்கும் மன நலத்திற்க்கும் உள்ள தொடர்பை அனைவருக்கும் தெரியப்படுத்துவதே உலக மனநல நாளில் இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமசிவம்,ஆர்,எம்,ஓ,ரமேஷ்,ருத்துவர் அலெசண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எதனால் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுகிறது. 

மனநலப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் நாள் உலகம் முழுவதும் உலக மனநல தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வயதானவர்களாக இருப்பது தான் கொடுமை. தனிமை, விரக்தி போன்றவை அவர்களை மனதளவில் பாதிப்படைய செய்கின்றன. அதற்கடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள், அதிலும் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள், இரவு நேரங்களில் பணியாற்றுபவர்கள் தான் மனநோய்க்கு அதிகளவில் ஆளாகின்றனர். தொடர்ச்சியான அதே வாழ்க்கை முறை அவர்களை நசுக்குகிறது. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் அதிகளவில் மனநோய்க்கு பாதிப்படைபவர்கள் அதிகமாக உள்ளனர் என்கின்றனர். மனநலம் பாதிப்பை நோய் என சொல்லவும் முடியாது. அது ஒவ்வொருவரின் மனநலம் சார்ந்தது, அதை மருந்து, மாத்திரை கொண்டு சரிச்செய்ய முடியாது. பிறர் காட்டும் அன்பே அதிலிருந்து விடுபட சிறந்த மருந்து. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தி, ஊக்குவித்து, அவர்களை சோம்பலை போக்கி, மனக்காயத்தை துடைத்தால் மனிதர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளாவதை தடுக்க முடியும்.

 




Recommended For You